கோ ரிலீஸ் ஆகி தமிழகம் முழுக்க தாறுமாறான வசூலை குவித்துக்
கொண்டிருக்கிறது. இதில் நடித்த ஜீவாவுக்கு பாராட்டுகள் குவிய குவிய, இந்த கேரக்டரை வேண்டாம் என்று மறுத்து ஒதுங்கிய சிம்புவின் மீதுதான் பார்வை போகிறது பலருக்கு. இந்த துரதிருஷ்டத்தை சிம்பு எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பது இருக்கட்டும்...
சிம்புவின் வலைதளத்தை பெரும் ரசிகர் கூட்டமே முற்றுகையிட்டிருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் என்று பல முனையங்களில் சிம்புவின் ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் இது பற்றி! நடிக்காமல் விலகியது நல்லதுதான் என்று சிலரும், நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே என்று சிலரும், இது அரசியல் படம். சிம்புவிற்கு சரிபடாது என்று சிலரும் சூடு கிளப்பி வருகிறார்கள்.
யாரோ நடித்த படத்தை பற்றி தனது வலைதளத்திற்கு வந்து இப்படி கும்மியடிப்பதை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை சிம்புவால். வேறொருவர் நடித்த படத்தை பற்றி இப்படி விவாதிப்பது பொறுத்தமாக இருக்காது. ஒரு படத்தில் நடிப்பதும் மறுப்பதும் அந்த நடிகரின் சுய விருப்பம். இந்த படத்தை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம். நானும் இந்த ஃபீல்டில்தான் இருக்கிறேன். எனவே இந்த விவாதத்தை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வருகிற 29 ந் தேதி வானம் வருகிறது. அதை வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் சிம்பு.
Nalla Padatha Miss Pannitan..idhu avan fans ku thangala...so ivana thappu sollama..padam mokka padam nu solranga..
ReplyDelete