"ரஜினி சார் உங்களை சந்திக்க வேண்டும் என்று தான் இந்த பிரஸ்மீட்டே வைக்க சொன்னாரு. ஆனா, எதிர்பாராதவிதமாக அவருக்கு உடம்பு சரியில்லாம போனதால அவரால வரமுடியல. அதற்கு அவருடைய சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று பேச ஆரம்பித்த கே.எஸ்.ரவிகுமாரிடம், ரஜினி டோ ட்டல் பிரஸை மீட் பண்ணி இருபது வருஷமாச்சு, இன்னைக்காவது எங்கள மீட் பண்ணுவாரு என்று நினைத்தோம், ஆனா மீட் பண்ணாம இருக்க இப்படி ஒரு ஸ்கிரிப்ட ரெடி பண்ணியிருங்கீங்களா? என்று நிருபர் ஒருவர் கேட்க, இல்லங்க, நான் எந்த ஸ்கீரின்பிளேவும் ரெடி பண்ணல; அதற்காக மருத்துவமனைக்கு போவாங்களா? கடந்த சில தினங்களுக்கு முன்பே அவருக்கு உடம்பு சரியில்ல; இந்த படத்தின் பூஜைக்கு முதல் நாளன்று இரவு ஒரு மணி வரைக்கும் எல்லோருக்கும் போன் போட்டு அவர்தான் பூஜைக்கு அழைச்சாரு. அதனால சரியான தூக்கம் இல்ல. ஷுட்டிங்ஸ்பாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு மூலம் சிறு அஜீரண கோளாறு ஏற்பட்டது. அதை செக்கப் பண்ணதான் மருத்துவமனைக்கு போனாரு. அப்பவே வீட்டுக்கும் போய்ட்டாரு அதுக்குள்ள என்ன என்னவோ செய்திகள் வெளியாகிவிட்டது அவ்வளவுதான்" என்று பதிலளித்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு மட்டும் ஒரு வருடகாலம் தேவைப்படும். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு பாடலை இப்போது ரஹ்மான் கொடுத்திருக்கிறார். அந்த பாடலைத்தான் இன்று படம் பிடித்தோம். சூட்டிங்கிற்காக லண்டனில் இன்னும் சில பகுதிகளுக்கு செல்ல இருக்கிறோம். மேலும் பரோடா, ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் சில காட்சிகளை படமாக்க இருக்கிறோம். படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக நூறு கோடியை தாண்டும். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுகிறோம். படத்தின் நாயகிகளில் தற்போது தீபிகா படுகோன் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் பரிசீலனையில் இருக்கிறார்கள். என்று படத்தைப் பற்றி கூறிய கே.எஸ்.ரவிகுமார், படத்தை கண்டிப்பாக 2012ஆம் ஆண்டு வெளியிடுவோம் என்றார்.
No comments:
Post a Comment