Tuesday, April 26, 2011

சூர்யாவின் ஏழாம் அறிவு



சூர்யா ,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த கஜினி தமிழ் சினிமாவின் முக்கிய மைல் கல் ஆன பிறகு மீண்டும் இதே கூட்டணி இணையும் படம்,ஏழாம் அறிவு...

இந்தப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகிறது..படம் பெரிய செலவில் தயாரவது பெரிய விசயமில்லை.அந்தளவு சத்தான கதை,திரைக்கதையுடன் வளர்வதுதான் முக்கியம்...முருகதாஸ் ரமணா,கஜினிக்கு பின் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர் ஆகிவிட்டார்.சூர்யாவும் அடுத்தடுத்த ஹிட்ஸ்களால் தமிழின் முக்கிய ஹீரோவாக ஜொலிக்கிறார்.

டாப் ஹீரோவும்,டாப் ஹீரோவும்,பாப்புலர் டெக்னீசியன்களும் கலந்து கட்டி அடிக்கும், மசாலா விருந்தாக ஏழாம் அறிவு இருக்கப்போகிறது...இதில் தசாவதாரம் போல பல வேடங்களில் சூர்யா நடிக்க போகிறாராம்...

சீனாவுக்கு குங்ஃபூ கலையை கற்றுக்கொடுத்ததே ஒரு தமிழ் மன்னன்தான் என்பதை ஆணித்தரமாக, ஆதாரத்துடன் இந்த படம் மூலம் நிரூபிக்க போகிறார்கள்...

சிங்கம் படத்தின் வெற்றி ஏ.பி.சி என தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது.விஜய் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொடுத்த நல்ல படமான காவலன் கூட சுமாரான வசூலே கொடுத்த நிலையில்,சூர்யாவின் சிங்கம் வெற்றிக்கு பின்,ஏழாம் அறிவும் மெஹாஹிட் ஆனால் வினியோகஸ்தர்களும்,தயாரிப்பாளர்களும் தன்னை மதிக்காமல் போய் விடுவார்களோ என்ற நடுக்கம் விஜய்க்கு ஏற்படுவது இயற்கைதானே.

No comments:

Post a Comment