இதற்கு காரணம், தற்போதுள்ள சினிமாவில் ஒரு படம் 25 நாட்கள் ஓடுவதே பெரிய விஷயமாக உள்ளது. அதிலும் தப்பி தவறி நூறு நாட்கள் ஒரு படம் ஓடினாலும் அந்த படங்களுக்கும் நூறாவதுநாள் விழாவை கொண்டாட தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை. இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் நேரடியாக தான் தயாரித்த 'குருவி', 'ஆதவன்' போன்ற படங்களுக்கு நூறாவது நாள் விழாவை கொண்டாடிய உதயநிதி ஸ்டாலின், தற்போது, வாங்கி வெளியிட்ட படங்களின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் மாபெரும் வெற்றி விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
குருவி, ஆதவன், மன்மதன் அம்பு ஆகியப் படங்களை நேரடியாக தயாரித்திருக்கும் உதயநிதி, விண்ணைத்தாண்டி வருவாயா, மதரசாப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகியப்படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார். இந்த நான்குப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நான்கு படங்களுக்கும் சேர்த்து ஒரு வெற்றி விழாவை கொண்டாடப்போகிறார்.
2011 மே 7ஆம் தேதியன்று சென்னை, நேறு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு இந்த நான்கு படத்தின் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் கேடயம் வழங்கி கெளரவிக்க இருக்கிறார்.
thala thala than
ReplyDeletethalaivaaaaaaaa vijay