Tuesday, April 26, 2011

ஜெயம் ரவி டீன் ஏஜ்ஜை நினைவுப்படுத்திய ஹன்சிகா

எங்கேயும் காதல்' படத்துக்காக பளபள 'பப்ளி கேர்ள்' ஹன்சிகா மோத்வானியுடன் ரொமான்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார் சாக்லெட் பாய் ஜெயம் ரவி. படம் குறித்து ஜெயம் ரவி கூறியது: 'எங்கேயும் காதல்' படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. படம் நன்றாக வர, கடுமையாக பட டீம் உழைத்துள்ளது. படத்துக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வருஷம் முழுக்க ஜாலியாக இருக்கும் லக்கி இளைஞன் கமலாக 'எங்கேயும் காதல்' படத்தில் வருகிறேன். நான் படத்தின் ஹீரோயின் ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட படக்குழுவுடன் உல்லாசமாக பிரான்சை வலம் வந்தோம். எனக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் வருகிறது, அதுக்கு பிறகு வரும் திருப்பு முனைதான் படத்தில் முக்கியமான ஒன்று. டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவின் டான்சை பார்த்து வளர்ந்த ஹீரோ நான். அவருடைய டைரக்ஷனில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். 'எங்கேயும் காதல்' படத்தில் வரும் ஹீரோ கேரக்டரில் என்னை பொருத்தமாக நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் 'பதின் பருவ' சிட்டாக ஹன்சிகா உற்சாகமாக சிறகடித்து, என்னுடைய டீன் ஏஜ்ஜை நினைவுப்படுத்தியுள்ளார். காதல் பரவச 'கெமிஸ்ட்ரியில்' நீந்தி களித்துள்ளோம். இதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நான் நடித்த 'தாம் தூம்' படத்துக்கு பிறகு, இந்த படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். அட்டகாசமான மியூசிக் ட்ராக்ஸ் கொடுத்துள்ளார், 'பேராண்மை' படமாகட்டும், 'எங்கேயும் காதல்' படமாகட்டும் நான் படத்தில் மிகையில்லாமல் நடித்துள்ளேன். டைரக்டர் அமீர் இயக்கத்தில் 'ஆதிபகவன்' படத்தில் நடித்துள்ளேன். இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையை அமீர் படமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவையே தலைகீழாக புரட்டி போடப்போற படம் அது. 'பருத்திவீரன்' படம் மாதிரி 'ஆதிபகவனும்' பரவலாக பேசப்படும், என்று கூறியுள்ளார் ஜெயம் ரவி. குல்ஃபி கப் ஐஸ் சாப்பிட்டுச்சாம்!

No comments:

Post a Comment