கோ சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதன் டிரைலரே ஏற்படுத்தி விட்டது..கே.வி.ஆனந்தின் சினிமா என்பதால் அவர் இயக்கிய முன்று படங்களுமே என்னை பொறுத்தவரை தரமானவை..மூன்றும் அருமையான களம் ...இந்த படமும் சேர்த்துதான் மூன்று என வினைக்கிறேன்.. ஜீவா வடிப்பில் வெளிவந்த ஈ பார்த்தபின் எனக்கு ஜீவா நடிப்பின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஆகிவிட்டது ...எஸ்.எம்.எஸ் படம் பார்த்தபின் இது இன்னும் அதிகமாகிவிட்டது..சந்தானமும் ஜீவாவும் அந்த படத்தில் செம கலக்கு கலக்கி இருப்பார்கள் ...மாமு ஒரு குவார்ட்டர் சொல்லு..கலக்கலான வசனம் .ஜீவா ரேடியோ ஜாக்கி ஹீரோயினை காதலிக்க விதவிதமாக போய் சொல்வதும்...கடைசி வரை திருந்தாத கேரக்டருமாக கலக்கியிருப்பார்.
சூர்யா கே.வ.ஆனந்த் இருவரும் இணைந்து கலக்கிய படம் அயன் ..பிரவுன் சுகர் கடத்தல் பற்றிய பல உண்மைகளை இதில் விறுவிறுப்பாக சொல்லியிருப்பார்..திரைக்கதையும் சுப்பர்..கேமிராவும் கலக்கல் ...அதே போல கோவும் டிரைலர் பார்த்ததும்...ரிப்போர்ட்டராக ஜீவா இதில் நடித்திருப்பார் என தோன்றுகிறது ...ரிப்போர்ட்டர் களம் செம விறு விருப்பாக ஆனந்துக்கு அமையும்.. ஜீவாவின் துடிப்பிற்கு ஏற்ற வேடம் ரிப்போர்ட்டர் ....
ஷங்கர் க்கு அடுத்தபடியான புதுமை,அழகியல் ,விறுவிறுப்பான திரைக்கதை,புதிய கதை என்ற பாணியில் செல்லும் ஆனந்துக்கு வாழ்த்துக்கள் ..
சரி சினிமா விமர்சனம் எங்கேன்னு கேட்குறிங்களா ...இது சும்மா டிரைலர் தாம்மா..நாளைக்கு இதே நேரத்துல நம்ம பிளாக் வந்துருங்க..ஹிஹி

No comments:
Post a Comment