| "வானம்" படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்து நடிக்கும் படம் "வேட்டை மன்னன்". ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இப்படத்தின் சூட்டிங் சென்னையில் இன்று(06.04.11) துவங்கியது. நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். புதுமுகம் நெல்சன் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிம்புவுடன் பாலிவுட் நடிகை ஒருவர் சேர்ந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சிம்புவுடன் சேர்ந்து சுப்ரமணியபுரம் ஜெய் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானமும் நடிக்க இருக்கிறார். சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளரும், நெருங்கிய நண்பருமான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் போன்று ஹாலிட் படங்களுக்கு நிகராக வேட்டை மன்னன் படம் இருக்கும் என்று கூறுகின்றனர். |
Tuesday, April 26, 2011
வேட்டை மன்னனை துவக்கினார் சிம்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment