Tuesday, April 26, 2011

குழப்பத்தில் சிம்பு


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் கைநிறைய படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா.

தமிழில் விரைவில் வெளிவர இருக்கும் "வானம்" மற்றும் "தெய்வத்திருமகன்" போன்ற படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

"வானம்" படத்தில் சிம்புவுடனும், "தெய்வத்திருமகன்" படத்தில் விக்ரமுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா.
இந்நிலையில் தமிழில் ரீ-மேக்காக இருக்கும் தபாங் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா அல்லது இலியானா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியில் வெளிவந்த பிளாக்பஸ்டர் மூவியான தபாங் திரைப்படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட உள்ளது.

இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். தில், தூள், கில்லி போன்ற ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் தரணி இப்படத்தை இயக்குகிறார். இதில் சிம்புவுக்கு ஏற்ற நாயகியை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக முதலில் நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரோ மறுத்துவிட்டார்.

இதனையடுத்து பாலிவுட் நடிகை சோனாம் கபூரை நடிக்க வைக்க சிம்பு முயற்சித்தார்.

ஆனால் சோனம் கபூரின் தந்தையோ பாலிவுட்டிலேயே நன்றாக நடித்து செட்டிலாகாட்டும் என்று கூறிவிட்டார். இதனால் சிம்புவும், தரணியும் புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

முன்னதாக இந்தி தபாங் படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹாவே தமிழில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் இடையில் விஸ்வரூபம் படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் தபாங் படத்தை ரீ-மேக் செய்ய இருக்கும் தயாரிப்பாளரோ, அனுஷ்காவை நடிக்க வைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

கூடவே அனுஷ்கா இல்லாவிட்டால் இலியானவை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறார்.

இதனால் தபாங்கில் யார்கூட நடிப்பது என்ற குழப்பத்தில் உள்ளாராம் சிம்பு.
 

No comments:

Post a Comment