ரஜினி ஒவ்வொரு ஆண்டும் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல் யாண மண்டபத்தில் இலவச மோர் பந்தல் அமைப்பது வழக்கம். கோடை வெயிலில் வாடுவோருக்கு தாகம் தணிக்க இதை அவர் செய்து வருகிறார்.
ஏப்ரல் முதல் வாரம் இந்த மோர் பந்தல் செயல் பட துவங்கும். இவ்வாண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த தால் சற்று தாமதமாக திறக்கப்பட்டு உள்ளது. ராகவேந்திரா மண்ட பத்தை ஒட்டி விசேஷ பந்தல் அமைத்து பாத்திரத்தில் மோர் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த வழியாக வருவோர் போவோர் அங்கு சென்று மோர் அருந்துகிறார்கள். பொது மக்கள், ஊழியர்கள் தொழி லாளர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பினரும் இங்கு மோர் அருந்தி செல்கிறார்கள். இதற்காக தினமும் 200 லிட்டர் தயிர் பயன்படுத் தப்படுகிறது. ஒரு நாளைக்கு 1600 லிட்டர் மோர் விநியோ கிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment