Saturday, April 30, 2011

குடும்பத்துடன் இத்தாலி சென்றார் விஜயகாந்த்!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் இத்தாலி புறப்பட்டு சென்றார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் இறுதிகட்டத்தில் தொண்டை வலி ஏற்பட்டு சரியாக பேச முடியாமல் அவதிப்பட்டார்.
இந்நிலையில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட களைப்பை போக்குவதற்காகவும், கோடை விடுமுறையை குதூகலமாக கழிப்பதற்காகவும் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல முடிவு செய்த விஜயகாந்த், இன்று விமானத்தில் இத்தாலி புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு கோடை விடுமுறை‌யில் ஹாங்காங் சென்ற விஜயகாந்த், இப்போது இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு சென்றுள்ளார்.
விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் பிரபகாரன், சண்முக பாண்டியன், மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி ஜோதி மற்றும் இரண்டு குழந்தைகளும் உடன் சென்றனர். இத்தாலில் உள்ள ரோம் நகரில் முக்கியமான இடங்களை சுற்றிப் பார்க்கும் விஜயகாந்த் பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள சில சுற்றுலா இடங்களுக்கும் விஜயகாந்த் குடும்பத்துடன் செல்கிறார்.
விஜயகாந்தின் இன்ப சுற்றுலா 13 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். 13 நாட்கள் இத்தாலி மற்றும் பிரான்சை சுற்றிப் பார்த்து விட்டு தேர்தல் முடிவு வெளியாகும் நாளான மே 13ம்தேதிக்கு முந்தைய நாள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment