Tuesday, April 26, 2011

பிரபுதேவா-சிம்பு மோதல்



நயன்தாரா பற்றி ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.

வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம்,
பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள்
வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சனை உருவானது. பின்னர் இருவரும்
பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு
தெரியவர பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக
முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து
சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா.
இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த
கையொடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள்
இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை
கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு.

நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தமக்கும், நயன்தாராவுக்கும்
இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தமது நண்பரிடம்
கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட
மிகவும் டென்ஷனாகி போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு
போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment