Monday, April 25, 2011

நடிகர் விக்ரமின் 'பட்சைப் புரட்சி'

 நடிகர் விக்ரமின் 'பட்சைப் புரட்சி'சென்னை,ஏப்.23(டிஎன்எஸ்)ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' என்ற அமைப்பின் இளைஞர் பிரிவு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் விக்ரம், கென்யாவில் நடைபெற்ற அதன் 23வது நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய விக்ரம், பச்சைப் புரட்சி என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்.

இதன் மூலம் தனது ரசிகர்கள், சமுதாயா நலனில் அக்கறைகொண்டவர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி, தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார். இதன் முதல் கட்டமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 100 மரக்கன்றுள் நடப்பட்டது.

இதனை தொடர்ந்து 'கற்க கசடற' என்ற அமைப்பையும் துவங்க இருக்கும் விக்ரம், இதன் மூலம் குடிசைப்பகுதி குழந்தைகள் வசதியின்று அல்லது வாய்ப்பின்றி படிப்பை பாதியிலேயே விட்டவர்கள் என அனைவரையும் தேடிபிடித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கப்போகிறார்.

முதல் கட்டமாக தமிழகத்தில் இந்த திட்டங்களை செயல்படுத்தும் விக்ரம், தொடர்ந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா என இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த இருக்கிறார். இது பற்றி பத்திரிகையாளர்களிடம் கூறிய விக்ரம்,"ஐக்கிய நாடுகள் சபையின் 'ஹபிடேட்' தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதற்காக கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பலரை தேர்வு செய்து அவர்களில் இருந்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த சமுதாயம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. எனக்கு ஒரு பொறுப்பு வந்திருக்கிறது. அதற்காக நான் சமுதாயத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணுகிறேன்.

ஏற்கனவே கண் தானம் முகாம்,ஏழை பெண்களுக்கு உதவி என எனது ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் பல நலப்பணிகளை செய்துவருகிறேன், ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் இன்னும் பல நலப் பணிகளை செய்ய திட்டமிட்டிருக்கிறேன். இந்த பணியில் என்னை பின்பற்றும் எனது ரசிகர்களையும்,ஐஏஎஸ்,ஐபிஎஸ்,சமூக பணியில் அக்கறைகொண்டவர்கள் என அனைவரையும் ஈடுபடுத்தப்போகிறேன்"என்றார். (டிஎன்எஸ்)

No comments:

Post a Comment