Tuesday, April 26, 2011

ஜெயம் ரவி-ஹன்சிகாவின் ‘கெமிஸ்ட்ரி’!


ஜெயம் ரவி-ஹன்சிகா நடித்துள்ள எங்கேயும் காதல்; படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

படம் நன்றாக வர, கடுமையாக படக்குழுவினர் உழைத்துள்ளனர். படத்துக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வருடம் முழுவதும் ஜாலியாக இருக்கும் இளைஞனாக 'எங்கேயும் காதல்' படத்தில் வருகிறேன்.

நான் படத்தின் ஹீரோயின் ஹன்சிகா மொத்வானி உள்ளிட்ட படக்குழுவுடன் உல்லாசமாக பிரான்சை வலம் வந்தோம். எனக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே காதல் வருகிறது, அதுக்கு பிறகு வரும் திருப்பு முனைதான் படத்தில் முக்கியமான ஒன்று.

பிரபு தேவாவின் நடனத்தை பார்த்து வளர்ந்தவன நான். அவருடைய இயக்கத்தில்; நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். எங்கேயும் காதல் படத்தில் வரும் கதாநாயகன் பாத்திரத்தில் என்னை பொருத்தமாக நடிக்க வைத்துள்ளார்.

இந்த படத்தில் 'பதின் பருவ' சிட்டாக ஹன்சிகா உற்சாகமாக சிறகடித்து, என்னுடைய டீன் ஏஜ்ஜை நினைவு படுத்தியுள்ளார், காதல் பரவச 'கெமிஸ்ட்ரியில்' நீந்தி களித்துள்ளோம். இதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம், நான் நடித்த 'தாம் தூம்' படத்துக்கு பிறகு, இந்த படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். அட்டகாசமான மியூசிக் ட்ராக்ஸ் கொடுத்துள்ளார்.

பேராண்மை படமாகட்டும், எங்கேயும் காதல் படமாகட்டும் நான் படத்தில் மிகையில்லாமல் நடித்துள்ளேன்.

இயக்குனர்; அமீர் இயக்கத்தில் 'ஆதி பகவன்' படத்தில் நடித்துள்ளேன். இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையை அமீர் படமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவையே தலைகீழாக புரட்டி போடப்போகின்ற படம் அது, பருத்திவீரன் படம் மாதிரி 'ஆதி பகவனும்' பரவலாக பேசப்படும் என்று கூறியுள்ளாராம் ஜெயம் ரவி.

No comments:

Post a Comment