இயக்குநர் ராஜேஷ் பிள்ளை இயக்கியிருக்கும் இப்படத்தில் சீனிவாசன், ரகுமான், ரம்யா நம்பீசன், அனுப் மேனன், சந்தியா உள்ளிட்டோ ர் நடித்திருக்கிறார்கள். கமர்ஷியலாக வெற்றி பெற்றதுடன், பத்திரிகைகளின் பாராட்டுக்களையும் இப்படம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் இப்படத்தை பார்த்த கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். மேலும் இந்த படத்தை தமிழ்ல் ரீ மேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினாராம்.
ஏற்கனவே இப்படத்தை தமிழில் எடுக்க இயக்குநர் ராஜேஷ் பிள்ளை முயற்சித்து வருகிறார். இந்தநேரத்தில் கமலே இப்படி பாராட்டியதால், அவரிடமே நடிக்க சம்மதமா என்று கேட்டிருக்கிறார் ராஜேஷ், கமலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கும் படமும் தள்ளி போவதால், இந்த இடைவேளியில் ட்ராபிக் படத்தை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் கமல். (டிஎன்எஸ்)
No comments:
Post a Comment