டைரக்டர் வெங்கட்பிரபுவுடன் காதல் இல்லை" என்று நடிகை பியா கூறினார்.
`பொய் சொல்லப் போறோம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பியா. ஏகன், பலே பாண்டியா, கோவா, கோ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு பியா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மற்ற கதாநாயகிகளின் சிகை அலங்காரங்களில் இருந்து உங்கள் சிகை அலங்காரம் மட்டும் வித்தியாசமாக தெரிகிறதே, எப்படி?
பதில்:- சின்ன வயதில் இருந்தே என் தலைமுடி சுருள் சுருளாகத்தான் இருக்கிறது. இதற்காக நான் பிரத்யேமாக எதுவும் செய்யவில்லை. என் தலைமுடி இயற்கையானது.
கேள்வி:- உங்களுக்கு `பாய்ப்ரெண்ட்' நிறைய இருப்பதாக சொல்கிறார்களே, உண்மையா?
பதில்:- அதில் என்ன தப்பு இருக்கிறது? எனக்கு நிறைய நண்பர்கள் இருப்பது உண்மைதான். அவர்கள் எனக்கு நண்பர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.
கேள்வி:- உங்களுக்கும், டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கும் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டதே?
பதில்:- வெங்கட்பிரபு எனக்கு, `கோவா' படத்தில் நல்ல வாய்ப்பை கொடுத்தார். அந்த வகையில் அவர் மீது எனக்கு மரியாதையும், நட்பும் உண்டு. அதற்கு பெயர் காதல் அல்ல. ஒரு நடிகைக்கும், டைரக்டருக்கும் இடையே உள்ள உறவுதான் எங்களுக்குள் இருந்து வருகிறது.
கேள்வி:- எந்த டைரக்டரின் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்:- மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
கேள்வி:- முத்த காட்சியில் நடிப்பீர்களா?
பதில்:- வாய்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.
கேள்வி:- தமிழ் ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்வீர்களா?
பதில்:- திருமணம் பற்றி நான் இன்னும் முடிவு எடுக்கவில்லையே...''
No comments:
Post a Comment