வானம்,போடாபோடி இரண்டு படங்களையும் முடித்துவிட்ட சிம்பு ரெஸ்ட் எடுக்க நேரமின்றி அடுத்த படமான வேட்டை மன்னன் வேலையில் இறங்கிவிட்டார். சப்தமேயின்றி 10 சதவீத படப்பிடிப்பை நடத்திவிட்டாராம். அந்த படத்தின் சண்டை காட்சியில் நடிப்பதற்காகதான் பின்னி மில்லில் ஸ்டண்ட் நடிகர்கள் குவிந்துள்ளனராம். 60 சண்டை கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும் சண்டை காட்சியை 7 கேமிராக்கள்கொண்டு படமாக்குகிறார்களாம்.
இந்த சண்டை காட்சியை எடுத்து முடித்ததும் மெக்ஸிகோவிற்கு பறக்கிறதாம் வேட்டைமன்னன் யூனிட். இதில் சிம்புவுக்கு ஜோடியாக இந்தி நடிகை ஒருவர் நடிக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இப்படம் மூன்று மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.
சிம்பு வேட்டை மன்னனை தொடங்கியது இயக்குனர் லிங்குசாமியின் மனசுக்குள் புளியை கரைத்திருக்கிறதாம்.
ஏனெனில் ஆர்யாவை வைத்து லிங்கு இயக்கும் படத்தின் பெயர் வேட்டை. இந்த கதையை முதலில் சிம்புவுக்குதான் சொல்லியிருந்தார் லிங்குசாமி. பிறகு இருவருக்குமிடையே முட்டிக்கொண்டதால் சிம்புவை விட்டுவிட்டு ஆர்யாவின் கால்ஷீட்டை வாங்கினார் லிங்குசாமி. இந்த கடுப்பில்தான் லிங்குசாமி வேட்டை என்று வைத்த பேரில் மன்னனை சேர்த்து வேட்டைமன்னன் என்று வீம்புக்கு ஒரு தலைப்பை அறிவித்தார் சிம்பு.
படத்தின் தலைப்பில் சிம்பு வம்பு செய்தாலும் பரவாயில்லை, ஆனால் தான் சொன்ன வேட்டை கதையையே சிறிது மாற்றம் செய்து எடுத்துவிடுவாரோ சிம்பு என அஞ்சுகிறாராம் லிங்குசாமி. எனவே சிம்பு வேட்டைமன்னனை முடிப்பதற்குள் வேட்டையை முடித்து வெளியிட்டாகவேண்டிய கட்டாயம் லிங்குசாமிக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment