Monday, April 25, 2011

ர‌ஜினியின் ஆப்சென்ட்


யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது வெளியே தெ‌ரிந்ததால் ர‌ஜினி அப்செட் என்று நேற்றே தெ‌ரிவித்திருந்தோம். இந்த அப்செட் ஆப்சென்டாக எதிரொலிக்கிறது.
ஏற்கனவே மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாது என ர‌ஜினி தெ‌ரிவித்து, அந்த விழாவே கேன்சலானது. இப்போது இன்னொரு விழாவுக்கும் வருகை தர மறுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
பிரச்சனை தூரப் போனாலும் துரத்திப் போவதெல்லாம் சினிமாவில்தான். நிஜத்தில்…? சொல்லவே கஷ்டமாக இருக்கிறது. மாவீரன் இசை வெளியீட்டு விழாவை தவிர்த்தவர், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நடத்தும் மாபெரும் வெற்றி விழாவையும் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்.
ரெட் ஜெயண்ட் வெளியிட்டப் படங்களில் மன்மதன் அம்பு போன்ற சில படங்கள் தவிர்த்து மற்றவை பெரும் வெற்றி பெற்றன. அதனை பிரமாண்டமாக கொண்டாடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த விழாவில் கலந்து கொள்வதாக வாக்கு தந்த சூப்பர் ஸ்டார் தற்போது அதை வாபஸ் வாங்கியிருக்கிறார்.
விழாவில் கலந்து கொண்டால் ஓட்டு பற்றி கேள்வி வரும்… அதனை தவிர்ப்பதற்காகவே இந்த ஆப்சென்ட் என்கிறார்கள்.

No comments:

Post a Comment