Sunday, May 8, 2011

டிஆர் ஆவேசம்

சிம்பு நடிப்பில் வெளிவந்திருக்கும் வானம் படத்தில் காவி கட்சிகளை விமர்சனம் செய்யும் காட்சிகள் இருப்பதாகக் கூறி பாஜகவினர் வானம் படத்தின் கட் அவுட்களை அகற்றியதோடு செருப்பு மாலையும் அணிவித்தனர்.
இதனால் பொங்கியெழுந்த சிம்பு ரசிகர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு சிம்புவிடம் மன்னிப்பு கேள் என்று கோஷங்கள் எழுப்பினர். பிறகு அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த‌த் தகவல் அறிந்ததும் காவல் நிலையத்துக்கு சென்ற டிஆர், தனது சொந்த பொறுப்பில் அவர்களை வெளியெ கொண்டு வந்தார். அத்துடன், நாட்டில் நடப்பதைதான் படத்தில் சொல்லியிருக்கிறார்கள், அரசியல் வேறு சினிமா வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள் என கேட்டுக் கொண்டவர், சிம்புவை வீணாக சீண்டாதீர்கள் என எச்ச‌ரிக்கையும் விடுத்தார்.
இந்த சம்பவத்தால் தமிழக பாஜகவுக்கு செம பப்ளிசிட்டி.

No comments:

Post a Comment