குத்து, கிரி, வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா. மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான், கன்னட தயாரிப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு, நடிக்க தடை விதிக்கப்பட்டு, பின்னர் அதில் இருந்து விடுபட்டு வந்தார். திவ்யா ஒருவரை காதலிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால் யார்? அவரது காதலன் என்பது ரகசியமாகவே இருந்த வந்த நிலையில், இப்போது அவரது காதலன் வெளிநாட்டை சேர்ந்த ரபேல் என்பது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல்., போட்டியை திவ்யாவும், அவரது காதலுனும் நேரில் ஒன்றாக பார்த்துள்ளனர். திவ்யாவின் காதலன் பெயர் ரபேலாம். தொழிலதிபரான ரபேல் ஒரு பார்ட்டியின் போது திவ்யாவை சந்தித்து இருக்கிறார். ஆரம்பத்தில் நட்பாக ஏற்பட்ட பழக்கம் இப்போது காதலில் போய் முடிந்திருக்கிறது. இவர்களது காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் இப்போது திருமணத்தில் நாட்டமில்லை என்று இருவரும் கூறி வருகின்றனர். காரணம் திவ்யா சினிமாவிலும், ரபேல் தன்னுடைய தொழிலும் இன்னும் நிறைய சாதிக்க வேண்டுமாம்.
No comments:
Post a Comment