| |
| அஜீத்தின் \'பில்லா-2\' ஷூட்டிங் மே மாதத்தில் தூத்துக்குடியில் துவங்குகிறது. பில்லா-2 படத்தின் ஒளிப்பதிவாளராக ஹேமந்த் சதுர்வேதி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்தி திரைப்பட உலகில் பெரிதும் பாராட்டப்படும் ஒளிப்பதிவாளர். \'மக்தி\' , ராம் கோபால் வர்மாவின் \' கம்பெனி\' , கரீனா கபூர் நடித்த \'குர்பான்\' போன்ற படங்களில் இவரது ஒளிப்பதிவு பெரிதும் பேசப்பட்டது. \'பில்லா\' படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்படத்தில் அஜீத்தை மிகவும் ஸ்டைலாக காட்டியதாக அவரது ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். இந்நிலையில் அப்படத்தின் அடுத்த பாகமான \'பில்லா-2\'வில் நீரவ் ஷா பணிபுரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீரவ் ஷா கைவசம் இப்போது பல படங்கள் இருப்பதால் பில்லா-2வில் பணியாற்ற இயலவில்லை. இந்நிலையில் படத்தை இயக்க, \'உன்னைப்போல் ஒருவன்\' படத்தின் இயக்குனர் சக்ரியும், ஒளிப்பதிவாளராக ஹேமந்த் சதுர்வேதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். \'பில்லா\' வைப் போலவே \'பில்லா-2\'வும் வெற்றி பெரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் |
Monday, May 23, 2011
அஜீத்தின் 'பில்லா-2' ஷூட்டிங் தூத்துக்குடியில் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment