Sunday, May 22, 2011

விஷால் பிரபுதேவா மோதலா?

vishal-prabhu-deva-18-05-11-02
விஷால் பிரபுதேவா இடையே மனவருத்தம் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவின் 'எங்கேயும் காதல்' படம் சரியாக போகவில்லை என்பதாலும், தற்போது இயக்கிவரும் விஷால் படத்திவிட அடுத்து இயக்கப்போகும் ஹிந்தி படத்தில் பிரபுதேவா அதிக கவனம் செலுத்துகிறார் என்பதாலும், விஷாலுக்கும் பிரபுதேவாவுக்கும் மன வருத்தம் என்று சொல்லப்படுகிறது.

இது பற்றி பிரபுதேவா  இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால் இது பற்றி சொல்லி இருக்கும் விஷால் "இதே போல் எத்தனை கட்டுக்கதைகள் வெளிவருமோ தெரியவில்லை? இதற்கு முன் 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவுடன் மோதல், பாலாவுடன் கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. அதே போல் இதுவும் பொய் என்பது விரைவில் தெரியவரும்", என்று தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment