Thursday, May 19, 2011

எடை குறைக்கும் அ‌‌ஜீத்

அப் இன் தி ஏர் படத்தில் வரும் ஜார்‌ஜ் குளூனியின் தோற்றத்தில் மங்காத்தா அ‌‌ஜீத்தைப் பார்ப்பதே அமர்க்களமாக உள்ளது. குளோஸ் கட் ஹேர் ஸ்டைலில் நரை முடிகள்… அ‌‌ஜீத்துக்கு துணிச்சல் ஜாஸ்தி.
மங்காத்தா ஏறக்குறைய முடிந்த நிலையில் பில்லா இரண்டாம் பாகத்துக்காக தயாராகி வருகிறார் தல. பில்லா இரண்டாம் பாகத்தில் பில்லாவின் இளமைப் பருவத்தை சொல்லவிருக்கிறார்கள். அதாவது சாதாரண ஒரு இளைஞன் எப்படி பில்லாவானான் என்ற கதையை.
கதைப்படி பில்லா முதல் பாகத்தில் வரும் அ‌‌ஜீத்தைவிட ஸ்லிம்மாக, இளமையாக பில்லா இரண்டாம் பாக அ‌‌ஜீத் தெ‌ரிய வேண்டும். இதற்காக இப்போதே உடற்பயிற்சியில் தீவிரமாகியுள்ளார் அ‌‌ஜீத். கணிசமான அளவு உடல் எடையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
உன்னைப்போல் ஒருவன் சக்‌ரி பில்லா இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

No comments:

Post a Comment