மங்காத்தா படத்திற்க்குப்பிறகு பில்லா 2 வில் அஜீத் நடிக்கப்போவதாகவும் அதை விஷ்ணுவர்தன் இயக்கப்போவதாகவும் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பில்லா 2 லிருந்து விஷ்ணுவர்தன் விலகினார். அவருக்கு பதிலாக உன்னைப்போல் ஒருவன் படத்தின் இயக்குனர் சக்ரி பில்லா 2 படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் சில வாரங்களுக்கு முன் பில்லா 2 வை தள்ளி வைத்து விட்டு ஜெயம் ராஜாவின் படத்தில் முதலில் நடிக்கலாம் என்று அஜீத் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின, அது உண்மையும் கூட என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது அஜீத்தின் முடிவில் மறுபடியும் மாற்றம் ஆம் பில்லா 2 வை முதலில் முடித்து விட்டு மற்றவைகளை பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்
No comments:
Post a Comment