சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் பாரதிராஜா தலைமயில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, சேரன், சீனு ராமசாமி, வெற்றி மாறன், எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், உள்ளிட்ட 500 இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்களும், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டம் முடிந்தவுடன் இயக்குனர் சங்க செயலாலர் செல்வமணி "ரஜின்காந்த் உடல் நலம் பெறவேண்டி நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்" என்று கூறினார். உடனே அனைவரும் எழுந்து நின்று பிரார்த்தனை செய்தார்கள்.
No comments:
Post a Comment