Saturday, April 30, 2011

வேங்கை >> முன்னோட்டம்

Tamil Flim venghaiஇந்தியாவின் தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.நாகிரெட்டியின், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பலவெற்றி படங்கள் வெளிவந்துள்ளன. பி. நாகிரெட்டியின் நல்லாசியுடன், பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் வேங்கை. ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் வேங்கை.
காதல் பாங்கான கதைகளிலே நடித்து வந்த தனுஷ், இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க உள்ளார். படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், கலாபவன்மணி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன், பொன்வண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, ஊர்வசி, ஐஸ்வர்யா, ஜி.சீனிவாசன், பறவை முனியம்மா, பயில்வான் ரங்கநாதன், அழகு, ஜெயமணி, பெஞ்சமின் ஆகியோரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதுகின்றனர், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். 

எல்லை மீறும் அனுஷ்கா!

anushkas over build-upஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலைந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல்லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பலரும் புலம்பி வருகின்றனர்.

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவருக்கு வெற்றியை தராவிட்டாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் அருந்ததீ படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட ஆரம்பித்து, இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் அம்மணியை படபூஜை, ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களுக்கு சென்னை வரும்போது, சம்பிரதாயத்திற்காகவாது பத்ரிகையாளர்களை பார்த்து ஹாய்...ஹலோ என்றாவது சொல்லுங்கள் என்று கூறிவருகின்றனர். ஆனால் அம்மணியோ அதெல்லாம் முடியாது. ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன், பதிரிகையாளர்கள் முன் தோன்ற வேண்டும் என்றால் கூடுதல் பைசா ஆகும் பரவாயில்லையா? என்று அங்கும் கரன்சி பேசுகிறாராம். இதனால் அவரது மேனேஜர் உட்பட பலர், அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக புலம்புகின்றனர்.

இருந்தாலும் அனுஷ்காவின் அலட்டல் கொஞ்சம் ஓவர் தான்!

100 கோடியை தாண்டும் 'ராணா' படத்தின் பட்ஜெட்

 100 கோடியை தாண்டும் 'ராணா' படத்தின் பட்ஜெட்முதல் நாள் படப்பிடிப்பின்போதே ஏகப்பட்ட விளம்பரத்தை தேடிகொண்டது ராணா படம். ரஜினி மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டது. ராணா சம்மந்தமாக வடிவேலு பேசியது என ஒரு பக்கம் அனல் பறந்தாலும், ரஜினியை தவிர்த்து மற்ற படக்குழுவினர் அனைவரும் அன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

"ரஜினி சார் உங்களை சந்திக்க வேண்டும் என்று தான் இந்த பிரஸ்மீட்டே வைக்க சொன்னாரு. ஆனா, எதிர்பாராதவிதமாக அவருக்கு உடம்பு சரியில்லாம போனதால அவரால வரமுடியல. அதற்கு அவருடைய சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று பேச ஆரம்பித்த கே.எஸ்.ரவிகுமாரிடம், ரஜினி டோ ட்டல் பிரஸை மீட் பண்ணி இருபது வருஷமாச்சு, இன்னைக்காவது எங்கள மீட் பண்ணுவாரு என்று நினைத்தோம், ஆனா மீட் பண்ணாம இருக்க இப்படி ஒரு ஸ்கிரிப்ட ரெடி பண்ணியிருங்கீங்களா? என்று நிருபர் ஒருவர் கேட்க, இல்லங்க, நான் எந்த ஸ்கீரின்பிளேவும் ரெடி பண்ணல; அதற்காக மருத்துவமனைக்கு போவாங்களா? கடந்த சில தினங்களுக்கு முன்பே அவருக்கு உடம்பு சரியில்ல; இந்த படத்தின் பூஜைக்கு முதல் நாளன்று இரவு ஒரு மணி வரைக்கும் எல்லோருக்கும் போன் போட்டு அவர்தான் பூஜைக்கு அழைச்சாரு. அதனால சரியான தூக்கம் இல்ல. ஷுட்டிங்ஸ்பாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு மூலம் சிறு அஜீரண கோளாறு ஏற்பட்டது. அதை செக்கப் பண்ணதான் மருத்துவமனைக்கு போனாரு. அப்பவே வீட்டுக்கும் போய்ட்டாரு அதுக்குள்ள என்ன என்னவோ செய்திகள் வெளியாகிவிட்டது அவ்வளவுதான்" என்று பதிலளித்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு மட்டும் ஒரு வருடகாலம் தேவைப்படும். படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் ஒரு பாடலை இப்போது ரஹ்மான் கொடுத்திருக்கிறார். அந்த பாடலைத்தான் இன்று படம் பிடித்தோம். சூட்டிங்கிற்காக லண்டனில் இன்னும் சில பகுதிகளுக்கு செல்ல இருக்கிறோம். மேலும் பரோடா, ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் சில காட்சிகளை படமாக்க இருக்கிறோம். படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக நூறு கோடியை தாண்டும். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுகிறோம். படத்தின் நாயகிகளில் தற்போது தீபிகா படுகோன் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் பரிசீலனையில் இருக்கிறார்கள். என்று படத்தைப் பற்றி கூறிய கே.எஸ்.ரவிகுமார், படத்தை கண்டிப்பாக 2012ஆம் ஆண்டு வெளியிடுவோம் என்றார். 

ரானாவாவது… காணாவாவது…! வடிவேலு பரபரப்பு பேட்டி!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நடிகர் வடிவேலு சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய வடிவேலு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.
ரானா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ரானாவாவது… காணாவாவது… அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க… என்று சிரித்தபடியே கூறினார்.

அஜித் நற்பணி இயக்கம் கலைக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்!!

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள அஜித், நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் – சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை – பார்க்கவும் மாட்‌டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.
வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.
இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
அஜித்குமாரின் இந்த அதிரடியான முடிவு அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் அஜித் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்கக்கூடியவை என்பதால் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். முன்பொருமுறை தலைமைக்கு கட்டுப்படாமல் ஒரு ரசிகர் மன்றம் இயங்கியதால், ரசிகர் மன்றத்தையே கலைப்‌பேன் என்று அஜித் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். அவரது எச்சரிக்கையையும் மீறி சில மன்றங்கள் தேர்தல் நேரத்தில் செயல்பட்டதால்தான் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அஜித்தின் இந்த முடிவு சரியானதுதானா? அல்லது இன்னும் கொஞ்சம் யோசித்து முடி‌‌வெடுத்திருக்க வேண்டுமா? என்பதை இங்கே கருத்தாக பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே…!!

குடும்பத்துடன் இத்தாலி சென்றார் விஜயகாந்த்!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் இத்தாலி புறப்பட்டு சென்றார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் இறுதிகட்டத்தில் தொண்டை வலி ஏற்பட்டு சரியாக பேச முடியாமல் அவதிப்பட்டார்.
இந்நிலையில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட களைப்பை போக்குவதற்காகவும், கோடை விடுமுறையை குதூகலமாக கழிப்பதற்காகவும் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல முடிவு செய்த விஜயகாந்த், இன்று விமானத்தில் இத்தாலி புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு கோடை விடுமுறை‌யில் ஹாங்காங் சென்ற விஜயகாந்த், இப்போது இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு சென்றுள்ளார்.
விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் பிரபகாரன், சண்முக பாண்டியன், மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி ஜோதி மற்றும் இரண்டு குழந்தைகளும் உடன் சென்றனர். இத்தாலில் உள்ள ரோம் நகரில் முக்கியமான இடங்களை சுற்றிப் பார்க்கும் விஜயகாந்த் பின்னர் அங்கிருந்து பிரான்ஸ் நாட்டிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் உள்ள சில சுற்றுலா இடங்களுக்கும் விஜயகாந்த் குடும்பத்துடன் செல்கிறார்.
விஜயகாந்தின் இன்ப சுற்றுலா 13 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாம். 13 நாட்கள் இத்தாலி மற்றும் பிரான்சை சுற்றிப் பார்த்து விட்டு தேர்தல் முடிவு வெளியாகும் நாளான மே 13ம்தேதிக்கு முந்தைய நாள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவாஜி, கமல் வாரிசுகள் சினிமாவில் இல்லையா? கருணாநிதி கேள்வி

சிவாஜி, கமல், சிவகுமார் உள்ளி‌ட்டோரின் வாரிசுகள் கூடத்தான் சினிமாவில் இருக்கிறார்கள். என்னுடைய வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் அர்த்தம் கற்பிப்பது ஏன்? என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொண்டாற்றியும், தொடர்ந்து தியாகங்கள் செய்தும் கட்சியின் தருக்களாக என்னுடைய பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் வளர்ந்துள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகில் பொருளீட்டி புகழ் ஈட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக் கணைகள் பாய்ச்சுவதால் உரிய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.
1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறேன். இதில் அபிமன்யூ, ராஜகுமாரி, பராசக்தி உள்ளிட்ட ஏராளமான படங்களும் அடக்கம். எனக்கும், திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் அனைவருடனும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகத்தினர் தெளிவாகப் புரிந்தவர்கள் என்பதை மறந்திருக்க முடியாது.
கருணாநிதியின் பேரன், பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி? எனக் கேள்வி எழுப்பி ஒரு புத்தகத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து, பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம். முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம்.சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும்-நடிகர் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், நடிகர் கமல், அவருடைய சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டு இருப்பதும், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அவருடைய பிள்ளைகள், ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை. அதுமாத்திரம் அல்ல; கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதனை முடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள்; எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாகி தெருவிலே நின்றார்கள் என்பதையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் புத்தகமாக எழுதியுள்ளார்.
என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும்-திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ?
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது


ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் “ராணா”. நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.“ராணா” படப்பிடிப்பு இன்று துவங்கியது. வட பழனியில் உள்ள ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் ராணா பெயர் பலகை மற்றும் படப்பிடிப்பு கருவிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இப்படம் 16-ம் நூற்றாண்டு கதை என்பதால் மன்னர் கால ஆடை அணிந்து ரஜினி வந்து இருந்தார். ரஜினியும் தீபிகா படுகோனேயும் சாமி கும்பிட்டனர். பின்னர் பஞ்சு அருணாச்சலம் கிளாப் அடிக்க ரஜினி நடித்த முதல் காட்சியை கே. பாலச்சந்தர் படமாக்கினார். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தீபிகா படுகோனேவின் பாடல் காட்சி படமானது.
விழாவுக்கு இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், ஏ.வி.எம் சரவணன், பஞ்சு அருணா சலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார். எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சீடுர்.சி. சக்தி, கே. நடராஜ், மகேந்திரன், கலைபுலி தாணு, எழுத்தாளர் சோ, வைரமுத்து, நடிகர் பிரபு, ராம்குமார், கே.சீடுர்.ஜி., கலைஞானம், சீடுர்.டி. சக்தி முக்தா சீனிவாசன், சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் அஸ்வின் மற்றும் சி.வி. ராஜேந்திரன், ஐஸ் அவுஸ் தியாகு, மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மவுனம் ரவி, ரியாஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
மூன்று கேரக்டர்களில் பெரிய ரஜினி வேடத்தில் வரும் ரஜினி இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்றார். பத்திரிகைகளிலும் இந்த ரஜினியின் கெட்டப்தான் வெளியாகி உள்ளது. இளைய ரஜினி வேடம் வெளியிடப்பட வில்லை. புராண காலத்து படம் என்பதால் நகைகளை விநியோகிக்க பிரபல நகை கடையொன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள் அமைக்க சார்லஜ் டார்வி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹாலிவுட் ஹிட் படமான “மாட்ரீக்ஸ்” படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய் தவர். ராஜீவன் அரங்குகள் அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.ராணா படக்குழுவினருக்கு போட்டோ ஒட்டிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதை கழுத்தில் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டு உள்ளார்க

ஓய்வில் ரஜினி... ராணா படப்பிடிப்பு ஒரு வாரம் ரத்து!

Rajiniரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால், நேற்று பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.


ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.

சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.

ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.

கேஎஸ் ரவிக்குமார்

ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.

பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.

படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பால்கே விருது... பாராட்டு மழையில் பாலச்சந்தர்!!

K Balachanderசென்னை: நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குநர்  கே பாலச்சந்தருக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிகின்றன.


இந்திய திரைப்பட துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாலச்சந்தரின் பங்களிப்புக்காக வழங்கியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலச்சந்தருக்கு தங்க தாமரையும், ரூ. 10 லட்சம் ரொக்கமும் வழங்கப்படும்.

எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படம் மூலம் வசனகர்த்தாவாக பாலச்சந்தர் அறிமுகமானார். அதன் பிறகு பல சாதனைகள் செய்தார்.

ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்...

விருது பெற்றது குறித்து பாலச்சந்தர் கூறும்போது, "சிவாஜிக்கு பிறகு எனக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்", என்றார். பாலச்சந்தருக்கு நடிகர்கள், இயக்குனர்  கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராணா படப்பிடிப்பு  துவக்கிழாவில் பாலச்சந்தர் கலந்து கொண்டபோதுதான் இந்த செய்தி வெளியானது. உடனே, படக்குழுவினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினிகாந்த்  :

சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் ஆளாக பாலச்சந்தருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த விருது மூலம் தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்திவிட்டார் கேபி சார், என்றார் ரஜினி.

கமல்ஹாஸன்:

பாலச்சந்தருக்கு இவ்விருது தாமதமாக கிடைத்துள்ளது. விருது கமிட்டியில் நான் இருந்திருந்தால் ஏக் துஜே கேலியே படத்துக்கு முன்பே கொடுத்திருப்பேன். விருது கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும்போது, இயக்குனர் பாலச்சந்தருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது கிடைத்ததன் மூலம் அவ்விருதுக்கு அழகும் அர்த்தமும் கிடைத்துள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த கவுரவத்தால் திரையுலகமே பெருமை பெற்றுள்ளது, என்றார்.

மேலும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பிலிம் சேம்பர் தலைவ்ர கேஆர்ஜி, பெப்ஸி தலைவர் விசிகுகநாதன் உள்ளிட்ட அனைத்து சினிமா சங்க தலைவர்களும் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பாராட்டு விழா:

தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடத் திரையுலகினர் பாலச்சந்தருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு அனைத்து மொழி சினிமா கலைஞர்களும் பங்கேற்கும் விதத்தில் விரைவில் பாராட்டு விழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!

Rajiniசென்னை: ஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நான்கரை மணி நேரத்துக்குப் பிறகு வீடு திரும்பினார்.


ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் களைப்பாக காணப்பட்டார். இந்த நிலையில், அவர் நடிக்கும் 'ராணா' படத்தின் படப்பிடிப்பு  , சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று காலை தொடங்கியது.

ரஜினிகாந்த் 'மேக்கப்'புடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் அவர் சாமி கும்பிடுவது போன்ற காட்சியை டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் முதலில் படமாக்கினார். அதன்பிறகு ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர், கதாநாயகி தீபிகா படுகோனே மற்றும் மும்பை நடன அழகிகள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி, ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள ஒரு அரங்கில் படமாக்கப்பட்டது.

வாந்தி

காரில் ஏறி சென்ற ரஜினிகாந்த் வழியில், பட அதிபர்  ஏவி.எம்.சரவணன் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். 12-30 மணி வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதி

உடனடியாக பிற்பகல் 1-45 மணி அளவில் அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார்கள்.

சில நிமிடங்களில், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வந்தார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி அவர் கூறுகையில், "அவர் நன்றாக இருக்கிறார். காலையில், 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் ஏதோ நச்சுத்தன்மை இருந்திருக்கிறது. அஜீரணம் காரணமாக இங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கிறார்," என்றார்.

ரஜினிகாந்துக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகிய இருவரும் சிகிச்சை அளித்தனர். அவருடைய உடல்நிலை பற்றி டாக்டர் கிஷோர் கூறுகையில், "ரஜினிகாந்துக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக அவர் வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அவருக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருடைய நாடி துடிப்பு சீராக உள்ளது. ரத்த அழுத்தமும், சுவாசமும் சீராக உள்ளன. பயப்படும்படி ஒன்றும் இல்லை", என்றார்.

டிஸ்சார்ஜ் ஆனார்

மாலை 6-15 மணி அளவில் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்தபோது, பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்தார். பின்னர் காரில் ஏறி, போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

'பேரை மாத்து...': விக்ரம் வீடு ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது

Deiva Thirumagan Movieதெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக் கோரி நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 100 பேரை போலீசார் கைது செய்தனர். 


சென்னையில் திருவான்மியூரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நதவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விக்ரம் நடித்துள்ள தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

'மாத்து மாத்து தேவரய்யாவை இழிவுபடுத்து பேரை மாத்து' என அவர்கள் கோஷமிட்டபடி வீட்டை முற்றுகையிட முனைந்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நத 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நல்ல முடிவு வரும்...

இதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த நடிகர் விக்ரம், "இதுபற்றி நான் கருத்து சொல்லி அவர்களின் கோபத்தை கிளற விரும்பவில்லை. இந்தப் பட பெயர் யாரையும் இழிவுபடுத்தாது. பெருமைதான் சேர்க்கும். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி நல்ல முடிவு எட்டப்படும்", என்றார்.

தமிழ் சினிமாவின் மைல்கல் பாலச்சந்தர்! - முதல்வர் கருணாநிதி

சென்னை: தமிழ் சினிமாவின் மைல்கல் இயக்குநர் பாலச்சந்தர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் முதல்வர்கருணாநிதி  .


இயக்குநர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்திருப்பதற்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தி:

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் தொடர்ந்து ஒளிவீசி வருபவரும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கித் தயாரித்தவரும், பல படங்களுக்கு ஏற்கனவே தேசிய விருதுகளும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவரும், தமிழ்த் திரையுலகில் பழுத்த அனுபவமும், ஏகோபித்த புகழும் கொண்டவரும், நீண்டநெடுங்காலமாக எனக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்பவருமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு; திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தனது சீரிய பங்கை வழங்கியமைக்காக; மத்திய அரசு  2010ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி அறிவித்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

தாதா சாகேப் பால்கே விருது பெறும் முதல் தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாலசந்தர் என்பது கூடுதல் சிறப்பாகும். அருமை நண்பர் கே.பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் புதிய சிந்தனையைப் பாய்ச்சி, சமூகப் பிரக்ஞையை உருவாக்கி, திருப்புமுனையை ஏற்படுத்தியவர். தமிழ்த் திரைப்படப் பரிணாமத்தில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை யாராலும் மறுத்திட இயலாது.

கே.பாலசந்தர் அவர்களுக்கு இந்த விருதின் மூலம் அகில இந்திய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்திருப்பது கண்டு எனது உள்ளம் பேருவகை கொள்கிறது. நண்பர் கே.பாலசந்தர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் முதல்வர்.

பாலச்சந்தரை வீடு தேடிப் போய் வாழ்த்திய அழகிரி - ஸ்டாலின்

பால்கே விருது பெற்ற பாலச்சந்தரை வீடு தேடிப்போய் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர் மத்திய அமைச்சர் முக அழகிரியும் துணை முதல்வர் முக ஸ்டாலினும்.

பாலச்சந்தருக்கு பொன்னாடை அணிவித்த முக அழகிரி, அவரது படங்கள் அனைத்தையும் பார்த்திருப்பதாகவும், தமிழ் சினிமாவின் பெருமை பாலச்சந்தர் என்றும் கூறினார்.

முக ஸ்டாலின் கூறுகையில், "நான் பாலச்சந்தரின் தீவிர ரசிகன். அவர் இயக்கிய பல படங்களை நான் பார்த்துள்ளேன். அவற்றில் சில படங்களை பலமுறை பார்த்துள்ளேன். அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. அதற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த விருது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த கவுரவம்," என்றார்.

முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கேபி:

பின்னர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் கே பாலச்சந்தர். இச்சந்திப்பின் போது கவிஞர் வைரமுத்து உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்தர், "ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு செஞ்சுரி ஆர்ட்டிஸ்ட். அவருக்குப் பிறகு எனக்கு இந்த விருது கிடைத்து இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். விருது கிடைத்ததற்காக முதல்வர் கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

இந்த விருதை தமிழ் ரசிகர்கள்  அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் எனக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

திருச்சியில் சூறாவளி: தண்டவாளத்தில் மரம் விழுந்து மின் துண்டிப்பு-ரயில்கள் நிறுத்தம்-பயணிகள் தவிப்பு

Trainதிருச்சி: திருச்சி, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.


இதில் திருச்சி அருகே லால்குடி பகுதியில் காட்டூர்-புளியம்பட்டி இடையே நள்ளிரவு 11.30 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் வேரோடு பெயர்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

காட்டூரில் இருந்து புள்ளம்பாடி வரை பல இடங்களில் தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் ரயில் பாதையின் மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருச்சி- சென்னை இடையே ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 12 ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

சென்னை நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சிறப்பு ரயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

டீசல் என்ஜின்கள் வரவழைக்கப்பட்டு இந்த ரயில்கள் மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புள்ளம்பாடியிலும், ராமேஸ்வரம், அனந்தபுரி ரயில்கள் கல்லக்குடி பளிக்காநத்தம் பகுதியிலும், முத்துநகர் அரியலூரிலும், பொதிகை எக்ஸ்பிரஸ் செந்துறையிலும், சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரத்திலும், ஹெளரா எக்ஸ்பிரஸ் திருச்சியிலும், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஈச்சங்காட்டிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.

மயிலாடுதுறை மெயின் லைன் வழியாக மாற்றி விடப்பட்டதால் இந்த ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக இயங்கின.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.15க்குப் பதிலாக 9 மணிக்கு மதுரை வந்ததடைந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வந்தடைந்தது.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கிளம்பி, மினசாரம் துண்டிக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. இந்த ரயிலை டீசல் என்ஜின் மூலம் சென்னைக்கு இழுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இது வழக்கமாக காலை 5.30 மணிக்கு சென்னை வந்தடையும். இன்று இந்த ரயில் பிற்பகல் 3 மணிக்குத் தான் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல விருத்தாசலத்தில் இரவு 8 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விருத்தாசலம் ரயில் நிலைய 2வது, 4வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததன.

அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் உளுந்தூர்பேட்டைக்கும் கோ.பூவலூருக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டாலும் மின்சாரம் இல்லாததால் அந்த ரயிலை இயக்க முடியவில்லை.

இதையடுத்து விருத்தாசலத்தில் இருந்து டீசல் என்ஜின் வரவழைக்கப்பட்டு அந்த ரயில் விருத்தாசலம் ரயில் நிலையம் போய்ச் சேர்ந்தது. இந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

இதே போல விழுப்புரம் குள்ளம்பாடி பகுதியிலும் கன மழையால் ரயில் என்ஜின்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மங்களுர் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்து சேர்ந்தது.

இரவு முதல் தீவிரமாக பணியாற்றிய ரயில்வே என்ஜினியர்கள் முயற்சியால் காலை 8 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது.

அரியலூர் ரயில் பாதையில் கற்கள்:

இதற்கிடையே அரியலூர் அருகே கன மழையால் பல பெரிய கற்கள் சரிந்து ரயில் பாதையில் விழுந்தன. இதனால் அந்த வழியே செல்லும் நெல்லை, பாண்டியன், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மயிலாடுதுறை வழியாக திருப்பி விடப்பட்டன.

தற்போது கோடை விடுமுறை என்பதால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. நள்ளிரவு முதல் காலை வரை ரயில்கள் நடுவழியில் நின்றதால் பயணிகள் உணவு, குடிநீர் இன்றி பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.

12 மணிநேரம் உழைத்தால்தான் வயிற்றைக் கழுவ முடியும்! - சீமான் மே தினச் செய்தி

மதுரை: 12 மணி நேரம் உழைத்தால்தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிர்பந்தம் வந்துவிட்டது இன்றைக்கு, என தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சீமான்.


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள மே தின செய்தி:

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை.

ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது.

இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள்.

1886 ம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணி நேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மே நாள் என்ற உழைப்பாளர் உரிமை தினத்தின் தொடக்கம்.

அந்த உரிமைப்போரில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியும், தூக்குமேடை ஏறியும் உயிர்தந்த ஈகியரை இந்த நாளில் நினைவில் ஏந்துவோம்.

அந்த உரிமை தினத்தை ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு முறைக்கு அஞ்சாமல், 1923ஆம் ஆண்டுசென்னை  கடற்கரையில் செங்கொடி ஏற்றி இந்த துணைக் கண்டத்திற்கே அறிமுகம் செய்து வைத்தவர் எங்கள் பாட்டன் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.

நவீன காலத்தின் தொடக்கத்தில் உலகெங்கும் உழைப்பாளர்களும்அவர்களின் உரிமைப்போரும் தோன்றிய காலத்தில்தான், தமிழினமும் நாடுதோறும் கூலிகளாய் சென்றது.

தமிழர்கள்  உலகிற்கு உழைப்பையும், அதன் வழி கூலி என்ற சொல்லையும் உலக மொழிகளுக்கெல்லாம் தந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற எம் முப்பாட்டனின் பொதுமைக்கு உயிர்கொடுத்தான்.

தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் உலகமுதலாளிகள் கற்றுக் கொண்ட பாடம். இன ஒடுக்குமுறை. அதனால்தான் உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று முழங்கிய மாமேதை லெனின், ஒடுக்கும் இனத்தின் தொழிலாளர்கள் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கு போராடவேண்டும் என்றார்.

எம் தமிழினத்திற்கு வந்த சாபக்கேடோ என்னவோ இந்திய பொதுவுடைமையாளர்கள் இதை வாய்ப்பாக மறந்துபோனார்கள்.

அதன்விளைவுதான் 30 கடல் மைல் தொலைவில் எம் உறவுகள் இன ஒடுக்கு முறையால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை மட்டுமல்ல உழைப்பாளர்கள் என்ற தகுதியையும் இழந்து பிச்சைக்காரர்களாய் கையேந்தி நிற்கிற கொடுமை.

தாய்த்தமிழகத்திலோ தொழில் வாய்ப்புகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு, தமிழர்களை அத்தக் கூலிகளாக மட்டுமே ஏற்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் பெருகியுள்ளன.

பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமையற்ற உதிரிகளாய் மாற்றப்பட்டிருக்கின்றனர். கொஞ்சநஞ்சம் உள்ள ஆலைகளிலும், 12 மணி நேரத்திற்கும் மேல் உழைத்தால் தான் வயிற்றைக் கழுவ முடியும் என்ற நிலை.

உழவுத்தொழில் தன் இறுதிக்காலத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது, உழவுக்கு அடுத்த நிலையில் இருந்த நெசவுத்தொழில் அழிந்து விட்டது. பட்டினிச் சாவுகளும், குடும்பமாய் தற்கொலை  செய்து கொள்வதும் தமிழர்களின் தலைவிதியாகிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபட்டு உழைப்பாளர்கள் உரிமைக்காய் ஒன்று சேர்வதற்கும், மேதின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம்.

-இவ்வாறு மே தின செய்தி அறிக்கை வெளியி்டப்பட்டுள்ளது.

Friday, April 29, 2011

Shriya out of Viswaroopam?

shriya-28-04-2011 Shriya Saran was signed up to play an important role in theSelvaraghavan-directed ViswaroopamBut now it looks like she will not be a part of the film any more. The reason for her ouster is said to be her recent visit to Sri Lanka. The actress was in Sri Lanka for a film shooting which is being directed by Deepa Mehta.
While in Sri Lanka, she has reportedly told in an interview that she loves the country for its nature and would love to visit the country once more. The makers of Viswaroopam feel that this could rake up a problem in future and have decided against casting her in the film.

சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத் பூரிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema newsதேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் தெலுங்கில் ஹிட்டான 'ரிங்கா… ரிங்கா…' பாடல், இப்போது இந்தியில் ஒலிக்கப்போகிறது. சல்மான் கான், அசின் நடித்து வரும் 'ரெடி' படத்துக்காக. சமீபத்தில் இந்த பாடலை கேட்ட சல்மான், இதன் மெட்டிலும் இசையிலும் மயங்கிப்போனாராம். உடனே இப்பாடலின் உரிமையை வாங்க தயாரிப்பாளருக்கு உத்தரவு போட்டிருக்கிறார் சல்மான். சமீபத்தில் 'ரெடி' படத்தின் விழா மும்பையில் நடந்தபோது, அதில் தேவிஸ்ரீ பிரசாத்தும் கலந்துகொண்டார்.  இது பற்றி அவர் கூறும்போது, “விழாவில் என்னை பார்த்ததும் சல்மான் கான் ஓடிவந்து, கட்டியணைத்தார். அவரது அன்பை கண்டு நெகிழ்ந்து போனேன். “சூப்பரா பாட்டு போட்டிருக்கே. இத்தனை நாள் எங்கிருந்தே? உன்னை இந்தி சினிமா பயன்படுத்திக்கணும்” என சல்மான் சொன்னது எனக்கு பெருமையா இருந்தது” என்றார்.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போட்டி நடத்தும் நாயகிகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema newsஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் படம் 'மாற்றான்'. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள். சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது படவில்லையாம். அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம். இதுமட்டும் இல்லாமல், தீபிகா படுகோனை சூர்யாவுக்கு ஜோடியாக முயிற்சிகள் எடுக்கபட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் சூப்பர் ஸ்டாரின் ஜோடி இப்போ. சம்பளம் 6 கோடி என தீபிகா படுகோன் கைகளை விரிக்க, தலை தெறிக்க ஓடிவந்திருக்கிறார்கள் படக்குழுவினர். இப்போது காஜல் அகர்வால், டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் நடிக்க போரடிக்குது : பாவனா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema newsமலையாளத்திலும், கன்னடத்திலும் பாவனா பிஸி. அதிலும் கன்னடத்தில் இப்போது இவர்தான் டாப். எல்லாம் புனித் ரா‌ஜ்குமாருடன் நடித்தப் படத்தின் ஹிட் தந்த யோகம். சமீபத்தில் தமிழ் படங்களை பாவனா நடிப்பதே இல்லை. மேலும் தமிழ் பட இயக்குனர்களும் பாவனாவை மறந்துவிட்டதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. தமிழில் பாவனா நடிக்க மாட்டீங்களா என்ற கேட்டதற்கு, நடிக்கிறதுக்கு ஸ்கோப் உள்ள கதையும், கேரக்டரும் இருந்தால் தமிழில் நடிக்கலாம். ஆனால் அப்படியான கேரக்டர் எதுவும் தமிழில் இல்லையே. வருகிற எல்லாம் சுத்த போர். தமிழில் நடிக்கவே போரடிக்குது என்று கூறினார் பாவனா. 

சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுதிவைக்கவில்லை: அறக்கட்டளை உறுப்பினர்கள்

Sai Babaபுட்டபர்த்தி: சத்ய சாய்பாபா தனக்கு பின் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை, மேலும் அறக்கட்டளை தொடர்பாக உயில் எதுவும் எழுதிவைக்கவும் இல்லை என்று சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


சாய்பாபா இறந்த பிறகு அறக்கட்டளை சொத்துக்களை உறுப்பினர்கள் கொள்ளையடிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சாய் அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் அளி்க்கும் வகையில் சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். பகவதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே. சக்ரவர்த்தி, தொழிலதிபர் வேணு சீனிவாசன், பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர், சார்டட் அக்கௌண்டன்ட் நாகானந்த் ஆகியோர் பேசினர்.

பாபாவுக்கு பணிவிடை செய்பவர் தான் சத்யஜித். அவர் ஒன்றும் அறங்காவலரோ, வாரிசோ கிடையாது. பாபா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அறக்கட்டளையின் அடுத்த தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது, அறக்கட்டளை பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து அடுத்த வாரம் கூடும் அறங்காவலர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அறக்கட்டளையின் சொத்துக்களை அதன் உறுப்பினர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்துவதாக வரும் செய்திகள் உண்மையில்லை. அவை அறப்பணிக்களுக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகின்றன. பாபா இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டி வாங்கியதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. அவர் இறந்த பிறகே அது பெங்களூரில் இருந்து வாங்கபப்ட்டது என்றனர்.

பாபா மருத்துவமனையில் இருந்தபோது அவருடைய உறவினர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவருடைய தம்பி மகன் ரத்னாகர் வன்மையாக மறுத்தார்.

பாபா மருத்துவமனையில் இருந்த 27 நாள்களும் தான் பாபாவுடன் இருந்ததாகவும், டாக்டர்கள் அனுமதித்த போதெல்லாம் அறக்கட்டளை உறுப்பினர்களும், பாபாவின் உறவினர்களும் வந்து பார்த்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.

உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் பாபாவே தனக்கு எந்த மருத்துவமனையில், எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மத்திய, மாநில அரசுத் தலைவர்கள் தங்களுக்கு அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்ததாக அவர்கள் கூறினார்கள்.

மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு

Ajithசென்னை: தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு. எக்காரணம் கொண்டும் மாற்றமில்லை, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார். 

அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Thursday, April 28, 2011

டென்ஷனில் மன்மதன்


மன்மத நடிகர் நடிக்க முடியாது என விலகிக்கொண்ட ஓரெழுத்துப் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது.
படத்தின் வெற்றி ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான் என்றாலும் ரசிகர்களிடையே இப்படம் மிகுந்த விவாதத்தை ஏற்படுத்தியது மன்மதனுக்கு எ‌ரிச்சலை தந்திருக்கிறது. எ‌ரிகிற கொள்ளியில் ஏவுகணையை செருகிய மாதி‌ரி அவரது டுவிட்ட‌ரிலேயே இந்தப் படத்தைப் பற்றிதான் அடித்துக் கொள்கிறார்கள்.
கடுப்பானவர் வேற இடத்துல போய் உங்க விவாதத்தை வச்சுக்கோங்க என பொங்கியிருக்கிறார். ரசிகர்கள் கேட்டால்தானே.

சிவகுமார் மகன் கார்த்திக்கு கல்யாணம்!


பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள கார்த்திக்கு வரும் ஜூலை மாதம் 3-ம் தேதி திருமணம் நடக்கிறது.
இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம். மணப்பெண் ஈரோட்டைச் சேர்ந்தவர்.
இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார் கூறுகையில், “ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம் செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடக்கிறது”, என்று அறிவித்துள்ளார்.
கார்த்தியுடன் காஜல் அகர்வால், தமன்னா போன்ற வட மாநில நடிகைகளை இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் இருந்தன. இன்னொரு வட மாநிலப் பெண் மருமகளாவதற்குள், நாமே முந்திக் கொள்ளலாம் என கொங்கு நாட்டு மருமகளைத் தேடிப்பிடித்துவிட்டார் போலிருக்கிறது சிவக்குமார்!

நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்… ‘திரும்ப வந்தார்’ ரீமா!

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசான பிறகு காணாமல் போனவர்கள் இருவர். ஒருவர் படத்தின் நாயகி ரீமா சென்.
இன்னொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்!
இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் தெற்குப் பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகூட மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம்.
ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார். இதில் மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் ஹீரோயினாம். மலேசியாவில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
மலையாளப் படங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் ரீமா.
சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவுப் பார்ட்டி ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் ரீமா!
அப்போ… கல்யாணம்?!

சிம்புவின் வானம் – ஒரு ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!


தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “வேதம்” படம் தமிழில் “வானம்” என்ற பெயரில் வெளிவருகிறது. வி.டிவி. கிரியேஷன்ஸ் சார்பில் கணேஷ் தயாரிக்க, கிரிஷ் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சிம்பு, அனுஷ்கா, பரத், ‌வேகா, பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சந்தானம் உள்ளிட்ட ‌பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
* தெலுங்கி வேதம் படத்தை இயக்கிய கிரிஷ் தான் தமிழில் வானம் படத்தையும் இயக்கி இருக்கிறார்.
* முதல்முறையாக சிம்புவும், பரத்தும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு பெரும் நட்சத்திர கூட்டமே நடித்திருக்கி்னறர்.
* சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் படாலை சிம்புவும், யுவனும் சேர்ந்து ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர். பாடலை மும்பையில் படமாக்கியுள்ளனர். மேலும் இந்தபாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இந்தியில் இந்த பாட்டை ஆல்பமாக எடுக்கின்றனர்.
* தற்போது பிரகாஷ்ராஜ் எல்லா மொழிகளையும் சேர்த்து 22 படங்களில் நடித்து வருகிறார். வானம் படத்திற்காக 15 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி படத்தை முடித்து கொடுத்து இருக்கிறார்.
* வானம் படத்திற்காக பரத், தன்னை தேடிவந்த இரண்டு படங்களையும் ஒப்பந்தம் செய்யாமல், வானம் பட ரிலீசுக்கு பிறகு முடிவெடுக்க இருக்கிறார். இந்த படத்திற்காக நிறைய இடங்களில் அடிபட்டும், அதை பொருட்படுத்தாமல் உற்சாகமாக நடித்து கொடுத்துள்ளார்.
* படத்தில் சிம்புவுடன் ஆட முதலில் அனுஷ்கா பயந்தாராம். பிறகு சிம்பு நடன அசைவுகளை சொல்லி கொடுத்த பிறகு வெளுத்து கட்டிவிட்டாராம். இந்த படமும், பாடலும் என் கேரியரில் மறக்கவே முடியாது என்று சொல்லி வருகிறாராம்.
* படத்தில் தயாரிப்பாளர் கணேஷ் நடிக்க மறுத்தும், சிம்புவின் ஆசைக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறாராம்.
* பம்பாய், ஹைதராபாத், காரைக்குடி, போன்ற பெரும்பாலான பகுதிகளில் படம் பிடித்துள்ளனர். அதிக பகுதி சென்னையில் எடுத்துள்ளனர்.
* தமிழ் சரியாக பேச வராத இயக்குநர் கிரிஷ், வானம் படம் முடிவதற்குள் தமிழை சரளமாக கற்றுக் கொண்டு தெலுங்கில் செய்த தவறு‌களை சரிசெய்து, தமிழில் வானமாக வடிவமைத்துள்ளார்.
* பாடல்கள், உடைகள், படப்பிடிப்பு தளம், மற்ற டெக்னீஷியன்கள் அனைவருமே இந்தபடத்தின் மூலம் நிச்சயம் பேசப்படுவார்களாம்.

பிரஸ் முன்னால் வரமாட்டேன்: அனுஷ்காவின் அலம்பல்!


அனுஷ்காவின் அலம்பல் எல்லை மீறிப் போவதாக அவரின் மேனேஜர் உட்பட பலரும் வருத்தத்தில் உள்ளனர்.
அக்கட பூமியில் கவர்ச்சியை கமர்ஷியலாக்கி கோடம்பாக்கத்தாரை உஷ்ணப்பட வைத்தவர் அனுஷ்கா. அவரை தமிழுக்கு அழைத்து வரும் உற்சவத்தை தனது ‘ரெண்டு’ படம் மூலம் சுந்தர் சி துவக்கி வைக்க, அனுஷ்காவின் அலை ஆரம்பமானது.
‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’ என்று அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களுக்கு கால்ஷீட்டை அள்ளி வீச, அனுஷ்காவின் கால்ஷீட்டுக்கு இப்போது தவம் கிடக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் ‘தெய்வத் திருமகன்’, சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத படம், இதைத்தவிர தெலுஙகில் நாகார்ஜுனா, பிரபாஸ் படங்கள் என்று கால்ஷீட்டை காசாக்குவதில் கவனமாக இருக்கிறார். ஆனால் செய்தி இதுவல்ல.
பூஜை, ஆடியோ வெளியீடு, ப்ரிவ்யூ, பிரிமீயர் என்று சென்னை வரும்போது டிவி, பிரின்ட் மீடியாவை சந்தித்து சம்பிரதாயமாக ஹாய்… ஹலோ சொல்லுங்கள். மற்றபடி அந்த ஹாய்… ஹலோவையே வேதவாக்காக்கி அவர்கள் பில்டப் பேட்டி போட்டு விடுவார்கள்’ என்று அவருக்கு வேதம் ஓதி வருகிறார்கள்.
ஆனால் அம்மணியோ, ‘ரசிகர்களுக்கு திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன். பிரஸ் முன்னால் காட்சி கொடுக்க எக்ஸ்ட்ரா பைசா ஆகும் பரவாயில்லையா?’ என்று அங்கும் கரன்சி கணக்கு பேசுகிறார்களாம். அதனால் ஏக எரிச்சலிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்!

ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு


சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராணா பூஜை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் தயாரிப்பு வேலைகள், ஸ்கிரிப்ட் பணிகள் மற்றும் தீபிகாவுக்கான தோற்ற வடிவமைப்பு குறித்த ஆலோசனைகள் நீண்டதால் ஒரு வாரம் தள்ளிப் போனதை முன்பே தெரிவித்திருந்தோம்.
இப்போது, அறிவித்தபடி ராணா படப்பிடிப்பு பூஜையுடன் நாளை ஏவிம்மில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியாகியுள்ளது.
அனாவசிய வதந்திகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அவ்வப்போது மீடியாவுக்குத் தெரிவிக்க முடிவு செய்துள்ள ரஜினி, மிகுந்த பாதுகாப்புடன் இந்த படப்பிடிப்பை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் பூஜை நடக்கிறது.
பின்னர், ஏவிஎம்மில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடர்கிறது. வெளிநாடுகளில், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத அழகிய இடங்களில் இந்தப் பாடல்கள் படமாக்கப்படுகின்றன.
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஏஆர் ரஹ்மான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்கத்துக்கு ராஜீவன் பொறுப்பேற்றுள்ளார். இயக்கம் கே எஸ் ரவிக்குமார். தயாரிப்பு: ஈராஸ் இன்டர்நேஷனல் கிஷோர் லுல்லா – ஆக்கர் ஸ்டுடியோஸ் சவுந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த்.
தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக வெளியாகும் இருமொழிப் படம் இது!

Wednesday, April 27, 2011

Suriya’s villain dumbstruck!

suriya-27-04-2011 Suriya’s villain Johnny Tri Nguyen in 7aam Arivu was dumbstruck over the filming of fight sequences in Kollywood. Though Johnny Tri Nguyen has performed in several Hollywood films and was a stunt performer in the famous Spiderman 2, he is awed by the amount of work people in the Tamil film industry put in to make a fight scene look
perfect.